தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து அபிவிருத்தியை நிலைநிறுத்துவது தொடர்பில் விசேட விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தலைமையில் அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் அரசாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் சிரேஷ்ட அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் உணவுப் பாதுகாப்பைப் பேணுதல், உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்துதல், உற்பத்தியை விரிவுபடுத்துதல், ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படுகிறது.