ரணில் விக்ரமசிங்கவிற்கு மாத்திரமல்ல, விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”ரணிலின் வெளிநாட்டுப் பயணத்தின்போது அரச நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டமை நிரூபணமாகியுள்ளதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கு உரித்தான சட்டமே ஜனாதிபதிகளுக்கும் உரித்தாகும், அவர்களுக்குப் பிரத்தியேகமான சட்டம் இல்லை, அதன் பிரகாரமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய வங்கியில் இடம்பெற்ற மோசடி தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்றும், அலோசியஸிடம் பணம் பெற்றவர்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மக்கள் வழங்கியுள்ள ஆணையில், இது முக்கியமான விடயமாகும் எனவே அதனை விரைவில் நிறைவேற்றுவோம்” என பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விரைவில் ராஜபக்ஷக்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
No Comments1 Min Read

