பொதுஜன பெரமுனாவின் (SLPP) உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) விளக்கம் அளித்து பின்னர் தனது இராஜினாமாவை அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, (Gotabaya Rajapaksa) பிரதமரை பதவி விலகுமாறு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் பதவி விலகியதும், அனைத்துக் கட்சிகள் அடங்கிய அமைச்சரவையை அமைக்க அனைத்து அரசியல் கட்சிகளையும் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) முன்வைத்துள்ள யோசனைகளுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி (SJB) நேற்று (சனிக்கிழமை) அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தற்போதைய ஜனாதிபதி பதவி விலக வேண்டும் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்மொழிந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் மேலும் கலந்துரையாடுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தை சந்திக்கவுள்ளதாக சட்டத்தரணி அஜித் P. பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த செயல்முறைக்கு SJB மற்ற அரசியல் கட்சிகளின் ஆதரவையும் கோரும் என்றார்