எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் மின்சாரம் துண்டிப்பு காரணமாக நாட்டில் மக்கள் தொடர்ந்தும் பாரிய அசௌகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
இந்நிலையில் 3,750 மெட்ரிக் டன் சமையல் எரிவாயு தாங்கிய கப்பல் ஒன்று இன்று பிற்பகல் நாட்டை வந்தடையவுள்ளது.
அதேநேரம், 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் தாங்கிய கப்பலும் இன்று நாட்டை வந்தடையவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி மற்றுமொரு எரிபொருள் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது.
அந்த கப்பலில், 40,000 மெட்ரிக் டன் நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.