விராட்கோலியும் அவரது மனைவி அனுஸ்கா சர்மாவும் தங்கள் ஹோட்டல் ரூமிற்குள் நுழைந்து அதனை படமெடுத்து வெளியிட்ட நபரை கடுமையாக குற்றம் சாடியுள்ளனர்.
தங்கள் அந்தரங்கம் மீறப்பட்டுள்ளது என இருவரும் தெரிவித்துள்ளனர்.
தங்களிற்கு மிகவும் பிடித்தமான வீரர் குறித்து இரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியடைவதும் பரபரப்பாவதும் அவர்களை சந்திப்பதற்கு துடிப்பதும் எனக்கு தெரியும் என வீடியோ ஒன்றை வெளியிட்டு விராட்கோலி சீற்றத்துடன் பதிவிட்டுள்ளார்.
நான் அதனை பாரட்டுவேன் ஆனால் இந்த வீடியோ பயங்கரமானது எனது அந்தரங்கம் குறித்து இந்த வீடியோ மிகவும் அச்சமடையவைத்துள்ளது எனவும் விராட் கோலி பதிவிட்டுள்ளார்.
எனது ஹோட்டல் அறையில் எனக்கு அந்தரங்கத்தி;ற்கான உரிமை இல்லாவிட்டால் எனக்கு வேறு எங்கு அவ்வாறான வாய்ப்பை நான் எதிர்பார்க்க முடியும் என தெரிவித்துள்ள விராட்கோலி தயவு செய்து மக்களின் அந்தரங்கத்தை மதியுங்கள் அவர்களை பொழுதுபோக்கிற்கான ஒரு பொருளாக கருதாதீர்கள் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனுஸ்கா சர்மாவும் தனது ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட வீடியோவை வெளியிட்டு பதிவிட்டுள்ள அவர் நான் கடந்த காலங்களில் இரசிகர்கள் இரக்கமோ கருணையோ காட்டாத சில சம்பவங்களை நான் அனுபவித்துள்ளேன்,ஆனால் இது மோசமான விடயம் என குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு மனிதனை முழுமையாக அவமானப்படுத்திய அவனது அந்தரங்கத்தினை மீறிய செயல் என அவர் தெரிவித்துள்ளார்.