மும்பையில் இருந்து பெங்களூர் நோக்கி பயணித்த விமானத்தில் பயணி ஒருவர் கழிப்பறையில் சிக்கிக்கொண்டவாறே பயணம் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த பயணி ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் கழிப்பறைக்குச் சென்றபோது, அதன் கதவு திறக்க முடியாதபடி சிக்கிக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த பயணி கழிப்பறையில் இருந்தவாறே1 மணித்தியாலமும் 50 நிமிடங்களும் பயணித்துள்ளார்.
பின்னர் பெங்களூரில் விமானம் தரையிறங்கியதும் பயணியை ஊழியர்கள் மீட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.