தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக தாம் ஒருபோதும் அறிவிக்கவில்லை என தேசிய சுதந்திர முன்னணி அறிவித்துள்ளது.
அத்தோடு சர்வகட்சி வேலைத்திட்டத்திற்காக ஜனாதிபதியிடம் 10 யோசனைகளை தேசிய சுதந்திர முன்னணி முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அதனை அமுல்படுத்தினால் சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு குறித்து பகிரங்கமாக அறிவிப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்