திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜின்னா நகர்ப் பகுதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிளொன்று மோதி விபத்திற்கு இலக்காகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று (28.02.2021) பிற்பகல் இடம்பெற்றுள்ள நிலையில் சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அபமபுர பகுதியிலிருந்து நிலாவெளி பகுதிக்குச் சென்று கொண்டிருந்த மோட்டார்சைக்கிளும், எதிர்த்திசையில் வந்த உழவு இயந்திரமும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த விபத்து சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.