சந்திரிக்காவிற்கும் தமிழீழ விடுதலை புலிகளுக்கும் இடையில் ஒரு வருட காலமாக காணப்பட்ட உறவு திருகோணமலையில் தமிழீழ விடுதலை புலிகள் தமது தாக்குதலை ஆரம்பித்த பின்னர் அறுந்துவிட்டதாக தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
2000 ஆண்டு சந்திரிக்கா வடக்கு,கிழக்கு மாகாணங்களுக்கு பல அதிகாரங்களை கொடுத்து பல்வேறு மாநிலங்களின் ஒன்றியமாற மாற்றி நற்செயலை மேற்கொண்டார்.
இருப்பினும் பௌத்த பிடி அப்படியே இருந்தது. மத்திய அரசாங்கம் சில விடயங்களில் தமது அதிகாரங்களை தக்கவைத்தது.பௌத்தமும் பாதுகாக்கப்பட்டது.
இதன்போது வடக்கு, கிழக்கினை இணைப்பது என்ற பெயரில் மூன்று மாநிலங்களாக பிரிக்கும் யோசனையை சந்திரிக்கா முன்வைத்தார்.இதனை தமிழ் கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனை ரணில் தலைமையிலான கட்சி நாடாளுமன்றத்திலேயே தீவைத்து கொளுத்தினர் என்றும் தெரிவித்துள்ளார்

