தாமும், தமது கட்சியும் உத்தேச 21ஆம் அரசியலமைப்பு திருத்தத்துக்கு முழு ஆதரவு வழங்குவதாக, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு கடிதம் ஒன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உத்தேச வரைவிலுள்ள திருத்தங்களுக்கு உடன்பாடு வழங்குதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.