தமிழ் திரைத்துறையில் தவிர்க்க முடியாத நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் 1992ம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
இதையடுத்து பல ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக மாறினார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் புகைப்படம் அவ்வப்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் விஜய்யின் அம்மா ஷோபா பேட்டி ஒன்றில் கலந்துள்ளார். அதில் தொகுப்பாளர் அவரிடம் விஜய் எப்படி இந்த வயதிலும் ஃபிட்டா இருக்கிறார் என்று கேள்வி கேட்டுள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஷோபா, “விஜய் தினமும் இரண்டு தோசை காலையிலும் இரவு நேரத்திலும் சாப்பிடுவார். நல்ல ஜிம்மில் உடற்பயிற்சி செய்வார்” என்று கூறியுள்ளார்