விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழக மக்கள் மட்டுமன்றி உலகளவில் வாழும் தமிழர்களையும் ஈர்த்துள்ளது. தற்போது பிக்பாஸ் 6வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் 21 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், இதுவரை 8 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
முத்து, ஷாந்தி, அசல் கோளார், ஷெரினா, மஹேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி என 8 பேர் வெளியேறியுள்ளனர்.
இந்த வாரம் யார் யார்?
இந்நிலையில் தொடர்ந்து இந்த வாரம் யார் வெளியேறப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல் ஒரு எவிக்க்ஷன் மட்டுமின்றி இந்த வாரம் டபுள் எவிக்க்ஷன் இருக்கிறது என தகவல் வெளியானது.
அதன்படி, ஆயிஷா மற்றும் ராம் இருவரும் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என தகவல்கள்வெளியாகியுள்ளன