பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜனனி, சமீபத்தில் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் முக்கியமான ரோலில் நடித்து இருந்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஜனனி லியோ படத்தின் ஷூட்டிங்கில் நடந்த சம்பவங்களை குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், படத்தின் ஷூட்டிங் சமயத்தில் விஜய் சார் இன்ஸ்டாகிராம் ஓபன் செய்தார்.
அப்போது அவரிடம், என்ன சார் கொஞ்சம் நேரத்துல இவ்ளோ ஃபாலோவர்ஸ் வந்துட்டாங்க என்று கேட்டேன். அதற்கு விஜய் சார் நீங்க இன்ஸ்டாகிராம் -ல இருக்கீங்களா என்று கேட்டு என்னுடைய இன்ஸ்டா ஐடியை பார்த்தார்.
அதில் சிம்பு பாட்டை பாடி வீடியோ ஒன்று பதிவிட்டு இருந்தேன். அந்த வீடியோ பார்த்தவுடன் விஜய் சார் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் அப்படி சிரித்து நான் பார்த்ததில்லை. விஜய் சார் என்னுடைய ஐடி சென்று அந்த வீடியோ பார்ப்பார் என எதிர்பார்க்கவில்லை என்று பிக் பாஸ் ஜனனி கூறியுள்ளார்.