தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படமான ’தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின்படி பூஜா ஹெக்டே இந்த படத்தின் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்துள்ள தகவலின்படி பூஜா ஹெக்டே இந்த படத்தில் நாயகியாக கிட்டத்தட்ட முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், அவருக்கு இந்த படத்தின் சம்பளமாக ரூபாய் 3.5 கோடி பேசப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது படுகிறது.