பிரித்தானியாவில் 3 பிள்ளைகளின் தந்தையான ஒருவர் தமது குடும்பத்தை வாரத்தில் இருமுறை மட்டும் குளிக்க அனுமதிப்பதுடன், சாப்பிடும் நேரம் போக, இருட்டில் இருக்கவே தமது குடும்பத்தை கட்டாயப்படுத்தியுள்ளார்இந்த விவகாரம் தொடர்பில் 56 வயதான ரச்சித் கத்லா நேற்று ரீடிங் கிரவுன் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்தாம் தெரிவு செய்யும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை மட்டுமே கத்லா தமது குடும்பத்தை பார்க்க வைத்துள்ளார் மட்டுமின்றி, விளம்பரங்கள் எதுவும் தமது குடும்பத்தினரை பார்க்க அனுமதித்தது இல்லை
மேலும் செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரம் மட்டுமே வெந்நீரை பயன்படுத்த அனுமதித்துள்ளார், அத்துடன் அவர்கள் குளியல் நீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது எனவும் தெரிய வந்துள்ளதுஇரவும் சாப்பிடும் நேரம் மட்டுமே மின் விளக்குகளை எரிய விட்டுள்ளார் எஞ்சிய நேரங்களில் மொத்த குடும்பத்தையும் இருட்டில் தங்க வைத்துள்ளார்கத்லாவின் இந்த கடும்போக்கு நடவடிக்கைகளால் வீட்டை விட்டு வெளியேறிய மூத்த மகன் கரீம்,
ஒரு சர்வாதிகாரியின் கீழ் வாழ்வது போல இருந்தது அதனாலையே தாம் 2011-ல் வீட்டை விட்டு வெளியேறியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்எதை சாப்பிட வேண்டும், எங்கே கல்வி கற்க வேண்டும், எந்த பாடம் தெரிவு செய்ய வேண்டும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கூட அவரே தெரிவு செய்வார் என்கிறார் 27 வயதான கரீம்இதுவரை தமது தந்தையிடம், தாம் திருமணம் செய்து கொண்டதையும் ஒரு பிள்ளைக்கு தந்தை என்பதையும் தெரிவிக்கவில்லை எனவும், அது ரகசியமாகவே இருக்கட்டும் என அவர் தெரிவித்துள்ளார்
கத்லா மீது தற்போது சிறார்களை துன்புறுத்துதல், தாக்குதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு வழக்கு பதியப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது