புதிய விதிமுறைகளை அறிமுகம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நிலையில் வாட்ஸ் ஆப் செயலியினை பயன்படுத்துவதை பல பயனர்கள் தவிர்த்திருந்தனர்.எனினும் எந்தவிதமான விதிமுறைகளையும் இதுவரை வாட்ஸ் ஆப் மாற்றவில்லை.
இந்நிலையில் அன்ரோயிட் மற்றும் ஆப்பிள் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனில் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி பயனர்களால் பரிமாறப்படும் புகைப்படங்கள் தானாக அழியக்கூடிய வசதியினை அறிமுகம் செய்யவுள்ளது.
இவ் வசதியானது Self-Destructing Photos என அழைக்கப்படுகின்றது.இவ் வசதியானது பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இதேபோன்று சில வாரங்களுக்கு முன்னர் குறுஞ்செய்திகள் தானாக அழியக்கூடிய வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.