தனது காதலுக்கு சம்மதம் தெரிவிக்காத காரணத்தால் , யுவதியின் மீது இளைஞன் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறப்படுகின்றமை அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியாவில் இன்று பகல் யுவதி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்திருந்தார்.
உயிரிழந்த பாலசுந்தரம் சத்தியகலா எனும் 34 வயதுடைய யுவதி, வவுனியா வடக்கு சேனைப்பிலவு எல்லைக்கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன், நெடுங்கேணி பொலிஸாரால் ஏற்கெனவே தண்டனைக்கு உட்பட்டு, நீதிமன்றத்தின் உத்தரவின் கீழ் தண்டனை பெற்றவர் என கூறப்படுகின்றது.
இந்நிலையில் தண்டனை காலம் நிறைவடைந்து கிராமத்துக்கு திரும்பிய அந்த இளைஞன், சமூகத்தினருடன் ஒத்திசைவான செயற்பாடுகளுக்கு குந்தகம் புரிந்துவந்ததாகவும், அதுதொடர்பில், கிராம மக்களும் முறையிட்டுள்ளனர்.
இந்நிலையில், உயிரிழந்த யுவதியிடம் தன்னை காதலிக்குமாறு அவர் வற்புறுத்திவந்ததுடன் துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளார். எனினும் குறித்த யுவதி அவரது காதலை ஏற்க மறுத்ததால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது