வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு தொழில்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ செல்வா விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இன்று வவுனியா மாவட்ட தொழில் அலுவலகத்திற்கு விஜயம் செய்ததுடன் அலுவலக உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார்.
இதன்போது உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தொடர்பாகவும், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் தொழில்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ செல்வா, வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் மற்றும் அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள நெசவு பயிற்சி நிலையங்கள் மற்றும் கைத்தறி நெசவு உற்பத்தி விற்பனை நிலையங்களிற்கு கைத்தறி நெசவு மற்றும் உள்நாட்டு ஆடைகள் உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறீ ஜயசேகர இன்றையதினம் (19) விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.