வவுனியா நகரில் கனகரக வாகனமும், மோட்டர் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானத்தில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (09.04) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,
வவுனியா நகர சந்தை சுற்றுவட்ட வீதி ஊடாக வந்த மோட்டர் சைக்கிள் ஒன்று கண்டி வீதியில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை முன்பாக பயணிக்க முற்பட்டவேளை, கண்டி வீதி வழியாக வவுனியா நகரை நோக்கி வந்த கனகரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
குறித்த விபத்தில் மோட்டர் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஏ9 வீதியூடான போக்குவரத்தும் 10 நிமிடங்கள் தடைப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.