ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அங்கு நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இன நல்லிணக்கத்திற்கான அடுத்த நகர்வு குறித்து இதன்போது ஆராயப்படும் என்றும் அரசாங்கத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை ஜனாதிபதியானதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு செல்லும் முதல் பயணம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.