வவுனியாவில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பை பேணிய மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனை முடிவுகள் சில இன்று (05.05) இரவு வெளியாகின.
அதில், வவுனியா நகரசபை சுகாதார பரிசோதகர், தவசிகுளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், வவுனியா நகரைச் சேர்ந்த இருவர், வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் என 5 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குள்ளான 5 பேரையும் கொரோனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ள சுகாதார பிரிவினர், அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
வவுனியாவில் நகரசபை சுகாதார பரிசோதகர் உட்பட மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று!!
Previous Articleதமிழ் தேசிய கூட்டமைப்பால் அநாதைகளாகிய தமிழர்கள்
Next Article கிளிநொச்சி இளைஞரின் விபரீத முடிவு!