நேற்று (11) முன்வைக்கப்பட்ட புதிய வரிக் கொள்கையின் மூலம் உள்ளூர் உற்பத்தித் துறைக்கு அரசாங்கம் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
இன்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு 36% வரி விதிக்கப்பட்டுள்ளதுடன் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு 14% முதல் 30% வரை வரி விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி துறையில் 14% இருந்த வரி 30% வரை செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .
அத்துடன் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் சம்பளத்திற்கு விதிக்கப்பட்ட வரி 30 இலட்சத்தில் இருந்து 15 இலட்சமாக குறைக்கப்பட்டுள்ளது.
முன்னர் ஆண்டிற்க 30 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு வரி விதிக்கப்பட்டதுடன் அது தற்போது, 15 இலட்சம் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சர்வாதிகார வரித் திருத்தங்கள் மேலும் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் இவை மேலும் பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.