2022ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரான முதலாவது அமைச்சரவைக் கூட்டம் நாளை (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நாடு எதிர்நோக்கும் வெளிநாட்டு கையிருப்பு விவகாரம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்காக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பான உடன்படிக்கை தொடர்பிலும் நாளைய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது