வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றதுது.
இதற்கான கடும் முயற்சிகளில் பொதுஜன பெரமுன அணியினர் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த அணியே தாம் பரிந்துரைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்கவில்லை என்றால், 22வது திருத்தச்சட்டத்தை தோற்கடிக்க போவதாக ஆரம்பத்தில் அச்சுறுத்தி வந்தனர்.
இந்நிலையில் , சில தினங்களுக்கு முன்னர் இந்த கோரிக்கை அடிப்படையாக கொண்டு வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க போவதாக ஜனாதிபதியை அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஜனாதிப கடும் பதில் தாக்குதல்
எனினும் அப்போது ஜனாதிபதியிடம் இருந்து எதிர்பாராத கடும் பதில் தாக்குதல் காரணமாக இந்த அணியினர் திரும்பி வர நேரிட்டுள்ளது.
இந்த நிலையில், வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க முடியாது போனால், வரவு செலவுத்திட்டத்தை தோற்கடிக்க போவதாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.