ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே பாராளுமன்றத்திற்கு படகில் வருவதற்கு விடுத்த கோரிக்கைக்கு சபாநாயரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.இந்நிலையில் வரலாற்றில் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உத்தியோகபூர்வமாக அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
அதேபோல், எதிர்காலத்தில் கொழும்பு நகரின் வாகன நெரிசலுக்கு தீர்வாக இதனை செயற்படுத்த எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், நான் கடந்த கன்னி அமர்வின் போது உத்தியோகபூர்வமற்ற வகையில் பாராளுமன்றத்திற்கு சென்றேன். எனினும் இன்று அனைத்து சட்டத் திட்டங்களுக்கு அமைவாக நீர் மார்க்கமாக பாராளுமன்றத்திற்கு செல்ல புறப்பட்டேன்.
இதனூடாக நீர் போக்குவரத்தை மேம்படுத்துவற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை நேற்றையதினம் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே பாராளுமன்றத்திற்கு படகில் சென்றிருந்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.