குடல் புழுக்கள் என்பது அசுத்தமான பழக்கவழக்கங்களால் உண்டாகிறது… குடல் புழுக்கள் வந்தால் சரியாக சாப்பிட முடியாது. வயிற்றுக் கோளாறுகள் வந்துவிடும். குடல் புழுக்களை குறைந்தது ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நீக்க வேண்டியது அவசியமாகும். குடல் புழுக்கள் வயிற்றில் வளர தொடங்கினால் குறைந்தது ஆறு மாதங்கள் வரையாவது வளரும் தன்மை கொண்டது.
குடல் புழுக்களை குழந்தைகளுக்கு நீர்ம மருந்து கொடுப்பதாலும், பெரியவர்களுக்கு புழுவை நீக்கும் மாத்திரைகளை சாப்பிடுவதாலும் நீக்க முடியும். ஆனால் இது போன்ற மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவது கூடாது. இதனை சாப்பிடும் போது மருத்துவர் பரிந்துரை என்பது மிகவும் அவசியமாகிறது. அதுமட்டுமின்றி இது போன்ற மாத்திரைகள் கர்ப்பிணி பெண்களுக்கு பரிந்துரைக்கப்படுவது இல்லை.
குடல் புழுக்கள் வந்த உடன் அழிப்பதற்கு பதிலாக அவை வயிற்றில் சேராமல் பாதுக்காத்துக் கொள்வது மிகவும் அவசியமாகிறது. குடல் புழுக்களை அழிக்க சில இயற்கையான காய்கறிகளும், இயற்கை மருந்துகளும் உள்ளன. உடலுக்கு எந்த விதமான தீங்கும் இன்றி குடல் புழுக்களை நீக்கிவிடும் தன்மை கொண்டது. இந்த பகுதியில் குடற்புழுக்கள் எதனால் உண்டாகின்றன, அவை வராமல் பாதுகாக்க என்னென்ன வழிகள் உள்ளன.. அவற்றை போக்க உதவும் வைத்தியங்கள் பற்றியும் விரிவாக காணலாம்.
பூசணி விதை
பூசணி விதையை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பூசணி விதை, தேன். அரை ஸ்பூன் அளவுக்கு பூசணி விதை பொடி எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வந்தால் குடல் புழுக்கள் வெளியேறும். பெரியவர்களுக்கு அரை ஸ்பூன் பூசணி விதை பொடியும், குழந்தைகளுக்கு கால் ஸ்பூன் அளவுக்கும் எடுக்கவும். இதை 3 நாட்கள் சாப்பிடலாம். 6 மாதத்துக்கு ஒருமுறை எடுத்துக்கொள்வது நன்மை தரும்.
பப்பாளி விதை
பப்பாளி விதையை பயன்படுத்தி குடல் புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். ஒரு ஸ்பூன் பப்பாளி விதை எடுக்கவும். சிறியவர்களுக்கு என்றால் அரை ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதில் தேவையான அளவு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து வாரம் ஒரு முறை என 4 வாரங்கள் குடித்துவர வயிற்று புழுக்கள் வெளியேறும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் வேப்பம் பூவை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். அரை ஸ்பூன் நெய் காய்ந்ததும் வேப்பம் பூவை சேர்த்து வதக்கவும். இதில், நீர் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். வடிக்கடி மாதம் ஒருறை குடித்துவர குடலில் புழுக்கள் வராமல் இருக்கும்.
வேப்பம் பூ
வேப்பம் பூவை முன்னோர்கள் வாரத்துக்கு ஒருமுறை உணவில் சேர்த்தார்கள். இதனால் குடல் புழுக்கள், தொற்று கிருமிகள் வராமல் தடுக்கப்பட்டது. வேப்பம் பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. வேப்பம் பூவை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் ஆரோக்கியம் கிடைக்கும். தரமற்ற, அதிகளவில் உணவை சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்றுவலியை குணப்படுத்தும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். இஞ்சியை சாறாக்கி தொப்புளில் 5 சொட்டுக்கள் விட்டு, தொப்புளை சுற்றி தடவுவதன் மூலம் வயிற்று வலி குணமாகும்.
கோவைக்காய்
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்..