திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வயலுக்குச் சென்ற ஒருவர் திடிரென உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பேராறு, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய சேகுஇஸ்மாயில் பைசர் என்பவரே இவ்வாறு வயலுக்குச் சென்ற நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த நபர் மாரடைப்பு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது விபத்தில் இறந்தாரா? என்பது தொடர்பான பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்ததோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்