வடக்கு மாகாண இளைஞர்களுக்கான நிகழ்நிலை வணிகம்(online Business) தொடர்பான பற்றிய வழிகாட்டல் கருத்தரங்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சினதும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினதும் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொழிநுட்ப கல்லூரியின் மண்டபத்தில் இடம்பெறுகின்றது.
இதில் முதல் நாளான நேற்று (24.11.2023) வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்ற மென்பொருள் நிறுவனமான WEBbuilders.lk இன் நிறுவுனர் திரு.உலகநாதன் ஷார்த்தீபன் அவர்கள் வடக்கு மாகாண இளைஞர்களுக்கு இணைய வணிகத்தின் முக்கியத்துவம் மற்றும் வாய்ப்புகள் பற்றிய தெளிவான புரிதல் வழிகாட்டலை மேற்கொண்டார் இதன் மூலம், அவர்கள் தங்களது திறன்களைப் பயன்படுத்தி இணைய வணிகத்தில் வெற்றிபெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்நிகழ்வில், பல்கலைகழக அனுமதி கிடைக்காத மாணவர்கள், தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளை பெற விரும்பிய இளைஞர் யுவதிகள் கலந்து சிறப்பித்தனர். இணைய வணிகத்தினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தொழில் வாய்ப்புக்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டன.தொடர்ந்து இந்நிகழ்வு இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது