வடமாகாண மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உதவிகள் மற்றும் சிறுபோக நெற்செய்கைக்கு தேவையான உரம் உள்ளிட்டவற்றை காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கொண்டுவருவதற்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடியுள்ளார்.
தொலைபேசி ஊடாக நேற்று இடம்பெற்ற, இரண்டு நாட்டு அமைச்சர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை இந்திய வெளியுறவு அமைச்சர் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் இதன்போது , கடற்றொழில் அமைச்சரின் குறித்த முயற்சிகளுக்கு இந்திய அரசாங்கம் பூரண ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது