லியோ திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவுள்ள படம் தான் தளபதி 68.
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
மேலும் பிரியங்கா மோகன், சினேகா, பிரஷாந்த், பிரபு தேவா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.
ஆனால், நேற்று வெளிவந்த தகவலின்படி இப்படத்தில் கதாநாயகியாக இளம் நடிகை மீனாட்சி சவுத்ரி என்பவர் தான் நடிக்கப்போகிறார் என தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், தளபதி 68ல் ஒரு முக்கிய ரோலில் 80ஸ் கதாநாயகன் மைக் மோகன் நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா என பொறுத்திருந்து பார்ப்போம். இன்று இப்படத்தின் பூஜை நடக்கவிருக்கிறது. இதன்பின் வருகிற 4ஆம் தேதி முதல் படப்பிடிப்பு துவங்கும் என தெரியவந்துள்ளது.

