ஏற்றுமதி சார்ந்த பொருளாதார கொள்கையின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
வங்கிகளின் தலைவர்களுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை ஏற்றுமதி நடவடிக்கைளை ஊக்குவிப்பதன் மூலமே சமாளிக்க முடியும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இலங்கை மட்டுமன்றி வெளிநாடுகளும் பல சவால்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என குறிப்பிட்ட பிரதமர் அதனை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும் தற்போதைய உலகளாவிய நெருக்கடியால் சுமார் எழுபது சதவீத நாடுகள் சிரமங்களை எதிர்கொள்கின்றன எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.