லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் ரிலீஸ் ஆக இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருக்கிறது. அதனால் படக்குழு இறுதிக் கட்ட பணிகளை செய்து வருகிறார்கள்.
மிக பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்த படத்தை லலித் குமார் தயாரித்து இருக்கிறார்.
லியோ படத்தின் முதல் பாதியை தயாரிப்பாளருக்கு போட்டு காட்டினாராம் லோகேஷ். அதை பார்த்துவிட்டு ‘சூப்பராக வந்திருக்கிறது, எடிட்டர் பிலோமின்ராஜ் நன்றாக வேலை செய்திருக்கிறார்’ என தயாரிப்பாளர் கூறினாராம்.
“சார், படத்தை இயக்கியது நான். ஆனால் நீங்க பிலோமின் ராஜை பாராட்டுறீங்க” என டென்ஷனாக கேட்டாராம் லோகேஷ்.
இந்த விஷயத்தை லலித்குமார் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது கூறி இருக்கிறார்.