லிட்ரோ எரிவாயுவின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5kg எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும். அத்துடன் 5kg எரிவாயு சிலிண்டருக்கு ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை ரூ.1,582 ஆக உள்ளது மேலும் 2.3kg சிலிண்டரின் விலை ரூ.32 குறைக்கப்பட்டு அதன் புதிய விலை ரூ.740 என அறிவிக்கப்பட்டுள்ளது.