இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டு தொடர்பில் தெல்தெனிய மாவட்ட நீதிமன்றத்தின் பதிவாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ஒருவரின் முறைப்பாட்டிற்கு அமைய தெல்தெனிய பகுதியில் உள்ள அரச வங்கி ஒன்றின் அருகில் இலஞ்சம் பெற முற்பட்ட சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் குறித்த கடற்படை அதிகாரியிடம் 10,000 ரூபா இலஞ்சம் பெற முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.