பங்குனி மாதத்தின் சுக்ல பக்ஷ பிரதமை திதியாகும். லக்ஷ்மி நாராயண யோகம், சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்து உருவாகி வருவதால், இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
மிதுன ராசி
நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு செல்வாக்கும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், பிள்ளைகள் தரப்பில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தடைபட்ட வேலைகள் நிறைவடையும்.
சிம்ம ராசி
துர்க்கை அன்னையின் அருளால், சொத்துக்கள் வாங்கும் விருப்பம் நாளை நிறைவேறும். முதலீடு செய்பவர்களுக்கு நாளை நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியை பாராட்டுவார்கள். செல்வாக்கும் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் உருவாகும், சமூகத்தில் உங்கள் மரியாதையும் அதிகரிக்கும்.
கன்னி ராசி
செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பின் பலனை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது. நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக ஸ்தலத்திற்குச் செல்லலாம். உங்கள் புத்திசாலித்தனத்தினால் எதிரிகளை எளிதில் வெல்வீர்கள்.
மகர ராசி
இந்த ராசிக்காரர்கள் நாளை ஆஞ்சனேயர் அருளால் பொறுமையுடன் முன்னேறி இலக்கை அடைவார்கள். செல்வாக்கு மிக்கவர்களின் உதவியையும் பெறுவீர்கள். பொருள் வளம் பெருகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். முதலீடு மூலம் நல்ல இலாபம் அடையலாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பரஸ்பர அன்பு இருக்கும்.
கும்ப ராசி
தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் சாதகமாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும்.
துர்க்கைக்கு அர்ச்சனை செய்து அகண்ட தீபம் ஏற்றவும். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பது பலன் தரும். எதிரிகள் மற்றும் இடையூறுகள் விலக, செவ்வாய்கிழமை விரதம் இருப்பது பலன் தரும். அனுமன் சாலிசா பாராயணம் செய்து, அனுமன் மந்திரங்களை உச்சரிக்கவும்.