எத்தனை பிரச்சினை வந்தாலும் அதனை சுலபமாக தீர்வு காணலாம். ஆனால் ஒருவருக்கு தலைமுடி பிரச்சினை வந்து விட்டால் அதற்கு தீர்வு காண்பது அரிதாகும்.
தொடர்ச்சியாக மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை வழக்கத்தால் தற்போது பெரும்பாலானவர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனை இருக்கிறது. முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு அளிக்கக் கூடியதாக பல ஷாம்பூக்கள், ஹேர் ஆயில், ஹேர் சீரம் உள்ளிட்ட பல பொருட்கள் சந்தையில் உள்ளன. இவற்றை வாங்கி எல்லோராலும் பயன்படுத்த முடியாது.
மாறாக இந்த பொருட்களால் சிலருக்கு மாத்திரமே தீர்வு கிடைக்கும் என பாவணையாளர்கள் கூறுகிறார்கள்.
தலைமுடி பிரச்சினை அதிகமாக உள்ளவர்கள் வீட்டிலுள்ள இயற்கையான பொருட்களை ஒன்று சேர்த்து வீட்டு வைத்தியம் செய்யலாம். இது நிச்சயம் நிரந்தர தீர்வு கொடுக்கும்
அந்த வகையில் தலைமுடி பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு கொடுக்கும் ஹேர் ஜெல் எப்படி தயாரிப்பது என்பது குறித்து தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
முதலில் அடுப்பில் ஒரு கப் அளவு தண்ணீர் வைத்து அது சூடானதும், அதில், ஒரு அளவான ஆளி விதைகளை சேர்த்து கொதிக்க விட வேண்டும். அது சுமாராக 5 நிமிடங்கள் வரை கொதித்தவுடன் வடிக்கட்டவும்.
அதன் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து, அதில் தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து விடவும். அதனூடன் சாதம் வடித்த கஞ்சையும் கலந்து விடவும்.
மேற்குறிப்பிட்ட அனைத்தையும் நன்றாக கலந்து விட்டு ஜெல் பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
இந்த ஹேர் ஜெல்லை தலைமுடி பிரச்சினையுள்ளவர்கள் தலைக்கு தேய்த்து சரியாக 30 நிமிடங்கள் வரை தலையில் வைத்திருக்கவும். இதனை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை பயன்படுத்தலாம்
ஆளி விதைகளில் இருக்கும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் தலைமுடிக்கு தேவையான சத்துக்களை வழங்கி, உறுதியாக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.