இந்தியா போன்ற நாடுகளில் உடல் எடை அதிகரிப்பு தொற்றுகள் போல் பரவியுள்ளது.
இதன் காரணமாக ஆண்கள், பெண்கள் என பலரும் கொழுப்பு கல்லீரல் என்ற நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். இந்நோயை பெரிதாக கண்டுக் கொள்ளாவிட்டால் காலப்போக்கில் அது “கல்லீரல் சிரோசிஸ்” என்ற கொடி நோயிக்கு ஆளாக்கிறது.
இதன்படி, அடிவயிற்றில் நீர் கோர்ப்பு, கால்களில் வீக்கம் உள்ளிட்ட காரணங்கள் கல்லீரல் சிரோசிஸ் நோயிற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகின்றது.
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் இருந்தால் ஆரம்பத்திலேயே உரிய சிகிச்சை எடுத்து கொள்வது சிறந்தது.
மேலும், ஆரோக்கியமான திசுக்கள் காணப்படும் இடங்களில் வடுக்களால் பாதிக்கப்பட்ட திசுக்கள் வளர ஆரம்பிக்கும். இதன் விளைவாக கல்லீரல் சிரோசிஸ், கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோயாக மாறுகிறது.
அந்த வகையில், கொழுப்பு கல்லீரல் நோய்க்கான அறிகுறிகளை தெரிந்து கொள்வோம்.
உடல் பருமன் அதிகரிப்பு என்பது வெறும் கொழுப்பு சேர்வது மட்டுமல்ல மாறாக டயாபடீஸ், ஹைபர்டென்சன், அதிக கொலஸ்ட்ரால் அளவு போன்றவற்றின் சேர்வையாக பார்க்கப்படுகிறது. இதனால் அநேகமானவர்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
உடல் பருமன் அதிகரிப்பினால் வரும் கொழுப்பு கல்லீரல் நோய் இரண்டு வகையாக பிரிக்கப்படும்.
1. அளவிற்கு அதிகமான மதுப்பழக்கம்.
2. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை.
கொழுப்பு கல்லீரல் நோயிற்கான காரணங்கள்
1. கல்லீரலில் ஏற்படும் வீக்கம், வடுக்கள் ரத்த நரம்புகளுக்கு அதிகமான அழுத்தத்தை கொடுக்கிறது. இதன் காரணமாக ரத்த நரம்புகளிலிருந்து வரும் திரவம் அடிவயிற்றில் படிய ஆரம்பிக்கும், இது காலப்போக்கில் வீக்கத்தையும், வலியையும் ஏற்படுத்தும்.
2. நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு அது கல்லீரலுக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை தடுக்கிறது. இதனால் சிறுநீரகத்துக்கு அதிகப்படியான உப்பை வெளியேற்ற முடியாத நிலை ஏற்படும். இதுவே கணுக்காலில் தேவையற்ற வீக்கம் உருவாக காரணம்.
3. சிலருக்கு கணுக்காலில் இருந்த வீக்கம் பாதங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் கடுமையான வலி ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
4. விரல்நுனிகள் வழக்கத்திற்கு மாறாக வட்ட வடிவில் வீங்கியது போல் இருந்தால் அது கல்லீரல் சிரோசிஸ் நோயின் முக்கிய அறிகுறியாக பார்க்கப்படுகிறது.