பாக்கியலட்சுமி பிரபலங்களில் இருவரும் காதலித்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய வந்த “கேளடி கண்மணி” சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகமாகியவர் தான் நடிகை திவ்யா கணேசன்.
இந்த சீரியல் சரியாக மக்கள் மத்தியில் நல்ல ரீச் கொடுக்கவில்லை. இதனால் சீரியல் பாதியுடன் நிறைவடைந்தது.
பின்னர் சமூக வலைத்தளங்களில் ஆர்வம் காட்டி வந்த திவ்யாவிற்கு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
சுமாராக 1 வருடத்திற்கு மேல் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் மனைவி ஜெனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரின் நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் ரீல் ஜோடியாக நடிக்கும் செழியனை திவ்யா காதலித்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சீரியலில் அடுத்தடுத்து அதிரடியான திருப்பங்கள் நடந்து கொண்டிருக்கின்றது. இந்த சமயத்தில் விகாஷ் சம்பத்- திவ்யா காதல் விவகாரம் வலைத்தளங்களில் பெரிதாக பேசப்பட்டு வருகின்றது.
திவ்யா ஏற்கனவே பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டு, பின்னர் அந்த திருமணம் நடக்காமல் போனது.
இருவருக்கும் இருந்த கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த திருமணம் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சில வருடங்களாக திருமணம் குறித்து எதுவும் பேசாத திவ்யா கூடிய விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பார் என தெரிகிறது.