ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என 96 வீதமானவர்கள் எதிர்பார்ப்பது டெய்லி மிரரின் கருத்துக்கணிப்பின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்க் பதவி விலகவேண்டும் அனைத்து கட்சிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கத்தை ஏற்படுத்தவேண்டும் என கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட பெருமளவான மக்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
கடந்த மூன்று வாரங்களாக பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துவருகின்றதை ஏற்று ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலகவேண்டுமா மட்டுப்படுத்தப்பட்ட நிபுணர்கள் அமைச்சரவையை ஏற்படுத்த வேண்டுமா என டெய்லி மிரர் எழுப்பிய கேள்விக்கு 96 வீதமானவர்கள்ஆம் என பதிலளித்துள்ளனர்.
அதேசமயம் 2.1 வீதமானவர்களே ஜனாதிபதியும் பிரதமரும் முழு அரசாங்கமும் பதவி விலககூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.