ராஜபக்ச அரசாங்கம் சலூன் கடையைப் போன்றது என்றும், எவரும் உள்நுழையலாம் வெளியேறலாம் எனஅமைச்சர் சனத் நிஷாந்த (Sanath Nishantha) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்திருந்து இடதுசாரி மத்தியஸ்த சக்திகளை அழைத்துதான் கூட்டு அரசாங்கம் உருவாகிவந்தது. ஏற்கனவே இருந்த அரசாங்கங்களில் இருந்த பிரச்சினைகள்தான் இன்றும் இருந்துவருகின்றன.
அரசாங்கத்தின் தலைவரான அரசதலைவர், பிரதமர் உள்ளிட்டவர்கள் அனைத்தையும் சரிவர நிர்வகித்து தீர்த்து வைப்பார்கள் என நம்புகின்றோம். அத்துடன் எமது சகோதர கட்சிகளுக்கு கூட்டணியிலிருந்து வெளியேறச் சொல்லமாட்டோம்.
ஏனெனில், ராஜபக்ஷ அரசாங்கமானது சலூன் கடையைப் போன்றது அங்கு எவர் வேண்டுமானாலும் எப்போதும், உள்நுழையலாம் வெளியேறலாம் என அமைச்சர் சனத் நிஷாந்த கூறினார்.