ராஜபக்ச அரசாங்கத்தின் அரசியல் பயணம் ஆட்டம் கண்டு விட்டது. இதனை பலரும் பல தடவைகள் கூறியும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அவர்களின் “எக்வ நெகிடிமு” அரசியல் பயணமும் மக்கள் மத்தியில் சென்றவர்களுக்கு முகத்தில் அடித்தாற் போல அமைந்துள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் முழு அதிகாரமும் தனிநபர் மீது குவிக்கப்பட்டு சர்வாதிகார ஆட்சியை மேற்கொண்டு வந்த தரப்பினரை கட்டுப்படுத்துவதற்கும் நாடாளுமன்றத்தின் ஜனநாயகம் மீண்டும் உறுதிசெய்யப்படவும் அரசியலமைப்பின் 22 ஆம் திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் மூலம் சாத்தியமாகியுள்ளது.
ராஜபக்சவினர் இல்லாத அரசியல் உருவாகும்..
இதனால் எதிர்காலத்தில் ராஜபக்ச இல்லாத அரசியல் உருவாகும் அல்லது ராஜபக்ச இல்லாத பொதுஜன பெரமுன அரசியலில் ஈடுபடும்.
அரசியலமைப்பின் 22 திருத்தத்தை நிறைவேற்றக்கூடாது என்று பொதுஜன பெரமுனவின் மிக முக்கிய புள்ளிகள் தீர்கமான முடிவில் இருந்தனர். எனினும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை எதிர்ப்பவர்கள் மற்றும் ராஜபக்ச அரசுக்கு எதிராக செயல்படும் குழுவினர் ஒன்றிணைந்து எவ்வாறாவது இரட்டை பிரஜாவுரிமை முறைமையை இல்லாது செய்து அவருடைய அரசியல் வரவிற்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.
அன்று 20 இற்கு வாக்களித்த அமைச்சர் அலி சப்ரி இன்று 22 ஆவது திருத்தத்திற்கு வாக்களித்திருக்கிறார். மேலும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22 திருத்தம் நாடாளுமன்றத்தின் மூலம் ராஜபக்சக்களுக்கு இருக்கும் அதிகாரம் இல்லாதொழிக்கபட்டுள்ளது.
ராஜபக்ச அரசாங்கத்தின் அரசியல் பயணம் ஆட்டம் கண்டு விட்டது. இதனை பலரும் பல தடவைகள் கூறியும் அதனை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை அவர்களின் “எக்வ நெகிடிமு” அரசியல் பயணமும் மக்கள் மத்தியில் சென்றவர்களுக்கு முகத்தில் அடித்தாற் போல அமைந்துள்ளது.
ராஜபக்சக்களின் அரசியலுக்கு முற்று
22 திருத்தம் நிறைவேற்றப்பட்டமை நாடாளுமன்றத்தில் வீரப்புடன் இருந்தவர்களுக்கு அது தக்க பதலிடியாகும். மேலும் அவர்களை எதிர்த்து அவர்களுக்கு எதிராக பலரும் வாக்களித்துள்ளது என்பது எதிர்காலத்தில் அவர்களுடைய இருப்பின் மீதான அரசியல் நம்பிக்கையை வலுவிழக்க செய்துள்ளது.
இன்று இவ்வாறு எதிராக செயல்பட்டவர்கள் நிச்சயம் எதிர்காலத்தில் அவர்களுக்கு எதிராக செயற்படுவார்கள்.
ஆகவே என்னை பொருத்தமட்டில் ராஜபக்சக்களின் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜபக்சஷக்களின் அரசியல் பயணம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் பொதுஜன பெரமுன கட்சியின் அரசியல் பயணம் முடிவுக்கு வரப்படும் அல்லது எதிர்காலத்தில் ராஜபக்ச இல்லாத பொதுஜன பெரமுன அரசியல் கட்சி நாட்டில் காணப்படும். ராஜபக்சக்கள் மொட்டுக்கட்சியில் காலடி எடுத்த வைக்க முடியாத நிலை ஒன்று ஏற்படும் என்றார என குறிப்பிட்டுள்ளார்.