இதுவரை காலமும் பசில் ராஜபக்சவின்பிடியிலிருந்த பொதுஜனபெரமுன தற்போது நாமல் ராஜபக்சவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் தகவல்கள் வெளியிட்டுள்ளன.
கட்சி கைமாறிய பின்னர் எழுச்சிபெற்றுவரும் இளைஞர்களிற்கு ஏற்றவகையில் கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் நாமல் ஈடுபடுவார் எனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை இடைக்கால அரசாங்கத்தில் எந்த பதவியையும் ஏற்கப்போவதில்லை என தீர்மானித்துள்ள நாமல் ராஜபக்ச, அடுத்தசில மாதங்களிற்கு பொதுஜனபெரமுனவை மறுசீரமைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவார் என சிங்கள ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜனபெரமுன கட்சியின் தலைவராக காணப்படுகின்ற போதிலும் அவருக்கு எந்த பொறுப்பும் இதுவரை வழங்கப்படவில்லை.
அதேபோன்று நாமல் ராஜபக்சவிற்கும் வழங்கப்படவில்லை,கட்சி முழுக்க முழுக்க பசில் ராஜபக்சவின் சொந்த நிறுவனமாக காணப்பட்டது. பெரமுனகட்சியின் அமைப்பாளர்கள் அனைவரும் பசில் ராஜபக்சவின் ஆதரவாளர்கள் ஜனாதிபதிக்கு கூட எந்த பொறுப்பும வழங்கப்படவில்லை .
இந்நிலையில் நாடாளாவியரீதியில் பசில் ராஜபக்சவிற்கு கடும் எதிர்ப்பு காணப்படுவதால் கட்சியின் தலைமையை நாமலிற்கு வழங்க ராஜபக்ச குடும்பம் தீர்மானித்துள்ளதாகவும்ஜ் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.