இலங்கை விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ‘Aeroflot’ விமானம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை தமது உத்தியோகபூர்வ ட்வீட்டர் பதிவொன்றிலே அவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – இலங்கையுடன் நீண்டகாலமாக சுமுகமான உறவை பேணி வருவதாகவும், ஆபத்தான நேரங்களில் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தொற்றின் போது கூட ரஷ்யா தொடர்ந்து உதவியதோடு, நமது சுற்றுலாத் துறையையும் புத்துயிர் பெற உதவும் வகையில் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அனுப்பியிருந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.