ரம்புக்கனை – ஹதரலியத்த பிரதான வீதியில் வெலிக்கடபொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்றையதினம் இரவு இடம்பெற்றுள்ளது.
விபத்தில், ஓர் லொறி, வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு லொறி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மோதியது.
குறித்த விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் சிலர் காயமடைந்துள்ளனர் என்றும், அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.