ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்டதில் 205 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கூறியுள்ளது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
வீட்டிற்கு தீ வைத்ததன் மூலம் 14 மில்லியன் ரூபாவும், ஜனாதிபதியின் வாகனத்தை எரித்ததன் மூலம் 191 மில்லியன் ரூபாவும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதென நீதிமன்றில் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி ரணிலின் வீடு எரிப்பு சம்பவம் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள 5 சந்தேகநபர்கள் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.