ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக வஜிர அபேவர்தன நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான ரணில் விக்கிரமசிங்க, எம்.பி பதவியை இராஜினாமா செய்துள்ளார் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் சபைக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இந்நிலையில், வெற்றிடமாக இருந்த ஐ.தே.க.வின் தேசியப் பட்டியல் எம்.பி பதவிக்கு, அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் இன்று (27 காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.