இலங்கையின் 74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை உறுதிப்படுத்தினார். எனினும், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களில் ரஞ்சனின் விடுதலை தொடர்பில் பல செய்திகள் வெளியாகி இருந்தாலும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ உத்தரவு எமக்கு வரவில்லை என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, 197 கைதிகளுக்கு ஜனாதிபதியினால் இன்று பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இன்று ராமநாயக்க சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.