ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், சிறை தண்டனை அனுபவித்து வருகின்றார்.
அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர், அங்கிருந்து வெலிக்கடை சிறைச்சாலையின் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில் , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, சிறைச்சாலைக்குச் சென்று அண்மையில் பார்வையிட்டுள்ளார்.
இது குறித்து எஸ்.பி திஸாநாயக்க கூறுகையில்,
“தான், ரஞ்சன் ராமநாயக்கவை பார்வையிடுவதற்குச் சென்றிருந்தேன். சுமார் அரைமணிநேரம் அவருடன் உரையாடியிருந்தேன். இதன்போது நான் தனியாக செல்லவில்லை. ரஞ்சன் ராமநாயக்கவின் காதலியுடன் சென்றிருந்தேன்.
காதலி ஒரு வைத்தியர், அவர், தனியார் வைத்தியசாலையில் கடமையாற்றுகின்றார். என்னுடன், என்னுடைய ஊடகச் செயலாளரும் வருகைதந்திருந்தார்” என்றும் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.
அத்துடன் “ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டுமென்பது தொடர்பில் கலந்துரையாடவில்லை. எனினும், பொது இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும். அதன்பின்னரே ஜனாதிபதியிடம் வலியுறுத்தமுடியும் என தெரிவித்த எஸ்.பி.திஸாநாயக் எனினும், இதுதொடர்பில் தான் சிந்தித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்