மோடியும் அம்பேத்கரும்’ என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் முன்னுரை பகுதியில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி தொடர்பாக புகழ்ந்து எழுதியிருந்தார்.
அதில் அண்ணல் அம்பேத்கரையும், பிரதமர் மோடியையும் ஒப்பிட்டு இளையராஜா எழுதியுள்ளதாக கூறி தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியையும் அம்பேத்கரையும் ஒப்பிடுவது தவறானது என்று ஒருதரப்பும், இல்லை அது சரியான கருத்து என்று மற்றொரு தரப்பும் சமூக வலைத்தளங்களில் இருவேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதனிடையே இளையராஜாவின் மகன் யுவன் சங்கர் ராஜா கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “இது இளையராஜாவின் விருப்பம், தனிப்பட்ட கருத்து. அதற்காக அவரை விமர்சிப்பது கூடாது.
இதற்கு முன்பு மோடியை புகழ்ந்து பேசிய தலைவர்கள் எல்லாம் இளையராஜாவை விமர்சனம் செய்றாங்க. அதனால் இது அவரது தனிப்பட்ட கருத்து என்று விட்டுவிட வேண்டியது தான்” என்றார்.
இதன் பிறகு யுவனின் பதிவு குறித்து பேசிய சீமான், “யுவன் தம்பிக்கு நான் ஒன்னு சொல்லிக்கிறேன் முதலில் நீ தெளிவாக இரு. கருப்பு திராவிடன், பெருமைமிகு தமிழன் என்று சொல்ற.
உனக்கு ரெண்டு அடையாளம் இல்லை ஒன்னும் திராவிடனாக இரு இல்லையென்றால் தமிழனாக இரு. தம்பி குழம்பாமல் இருங்க. கே.ஜிஎஃப் நடிகர் யாஷ் நான் பெருமைமிகு கன்னடன் என்று சொல்கிறார். அதேபோன்று நீயும் பெருமைமிகு தமிழன் என்று சொல்ல வேண்டியதுதானே.
யுவன் சின்ன பிள்ளை அவருக்கு தெரியல, அதனால அதை விட்டுவிடுங்கள். கருப்பாக இருப்பதால் கருப்பு திராவினா? எருமை மாடு கூடத்தான் கருப்பாக இருக்கிறது. அதுக்குன்னு அதுவும் திராவிடரா” என்று யுவன் சங்கர் ராஜாவை பங்கமாக களைத்தார் சீமான்.