யாழ்ப்பாண நகருக்கு வருகை தந்த இலங்கையின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் (Sanath Jayasuriya) செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர்.
யாழ்ப்பாணம் முற்றவெளியில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்-2023 நேற்று ஞாயிற்றுக்கிழமை (16-07-2023) இரண்டாவது நாளாக இடம்பெற்றது.
இதன் போது விருந்தினராக கலந்து கொண்ட சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக இளைஞர்கள் யுவதிகள் அரச ஊழியர்கள் என பலரும் முண்டியடித்தை அவதானிக்க முடிந்தது.
இதன்போது தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவும் (Manusha Nanayakkara) உடனிருந்தார்.